Monday, 17 September 2007

நெட்தமிழ்.காம் சேவை !

http://www.nettamil.com/

நெட்தமிழ்.கோம் பல சேவைகளை ஒருங்கிணைத்து தருகிறது. அனைத்து தமிழ் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்க பட்டுள்ளது. ஆங்கில மொழிமாற்றம் செய்து பார்க்கும் வசதியும் உள்ளது.

Sunday, 2 September 2007

இணைய தமிழ் நூல்கள் அங்காடி !


தமிழ்நூல்.காம் தளத்தில் 36000 அதிகமான தமிழ் நூற் தலைப்புகளை 82 பாடவகைகளில் தொகுத்துள்ளார்கள். எந்த ஒரு தமிழ் நூலையும் தலைப்பு வாரியாகவோ, ஆசிரியர் வாரியாகவோ, பாடவகை வாரியாகவோ தேடலாம், வாங்கலாம். பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் நூற்பிரியர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதம்.

Sunday, 26 August 2007

வலைப்பதிவுகளின் வலைப்பக்கம் !

நன்றாக தொகுத்துள்ளார்கள். தமிழில் எழுதப்படும் அனைத்து பதிவுதளங்களை
வரிசையாக கொடுத்துள்ளார்கள். நமக்கு பிடித்த பதிவை சுலபமாக எடுக்கலாம்.

Sunday, 19 August 2007

இனிய இசை இலவசமாக !

1980 மேல் வெளிவந்த திரைப்பட பாடல்கள், பக்தி பாடல்கள், புது ஆள்பங்கள் மற்றும் வாத்திய இசை அனைத்தும் எளிய வடிவில் இலவசமாக கேட்கும்படி தொகுத்திருக்கிறார்கள். மற்ற இணையதளங்களை விட இசை ஒலி தரம் நன்றாக உள்ளது. கேட்டு பாருங்கள். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Monday, 13 August 2007

இணைய தேனீ !

பல்வேறு வாசகர்களின் விருப்பத்திர்க்கு இணங்க, இனி வாரம் ஒரு பயனுள்ள தமிழ் சார்ந்த இணையதளத்தை பற்றி பார்ப்போம்.

புதிய யூநிகோட் முறையில் பிரசுரிக்கப்படுகிறது. தமிழ் மொழி இணையத்திற்கு தேவையான அனைத்து கோப்புகளும் எளிமையன
வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. நல்ல முயற்சி. மேலும் வானொலி( in free flash player ), வாழ்த்துக்கள், அரட்டை அரங்கம், கருத்துகலம் போன்ற இணைய தொடர்புகளும் உள்ளது.

Sunday, 4 February 2007

தமிழர்களின் பொருளாதார நிலை !

தமிழர்களின் பொருளாதார நிலை 25 ஆண்டுகள் முன்பு இருந்ததை விட இப்போது உயர்ந்திருக்கிறதா?. தாழ்ந்திருக்கிறதா?. உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

குறிப்பு: Comments தொடர்பில் கருத்துக்களை எழுதவும்.

Wednesday, 31 January 2007

தமிழின அன்பர்க்கு வணக்கங்கள் !

யாதும் ஊரே யாவரும் கேளிர். இன்று நம் தமிழினம் உலகம் முழுவதும் பரவிவுள்ளனர். இந்தியா இலங்கை, சிங்கப்பூர், மலயாசியா, ஐரோப்பிய நாடுகள், மேற்கு அமேரிக்க நாடுகள் மற்றும் நடு கிழக்கு நாடுகளில் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கினைக்கும் முயற்சியே இந்த கருத்துப்பாலம் (Blog).